இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் "ஒளிரும் தமிழ்நாடு" மாநாடு

0 2585

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், தொழில் உற்பத்தி பாதிப்படையாமல் இருக்க தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி இயல்புநிலை திரும்பச் செய்ய வேண்டும் என்று தொழில் நிறுவனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும், "ஒளிரும் தமிழ்நாடு" என்ற காணொலி மாநாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிஐஐ தலைவர்
ஹரி தியாகராஜன், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத்தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழுமத்தின் துணைத்தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டைம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்தவும், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன என்ற ஆய்வுத் தகவலையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிமாநில தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடு செய்ய தமிழக தொழிலாளர்களை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டினையும் முதலமைச்சர் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments